விபத்தில் பேரன் பலி! அதிர்ச்சியில் பாட்டி மரணம்!!
Thursday, July 21st, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார்.
சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனை கேள்வியுற்ற இளைஞனின் அப்பம்மா அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஐ.நா சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகின்றார்!
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
|
|
|


