வித்தியா படுகொலை வழக்கு: அடுத்த தவணையில் அறிக்கை சமர்பிப்பு?

மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பில் ஜின்டெக் நிறுவனத்தால் செய்யப்பட்ட டி.என்.ஏ அறிக்கையை, அடுத்த வழக்கு தவணையான மே மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்’ என ஜின்டெக் நிறுவனத்தினர் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மாணவி கொலை வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11 மற்றும் 12ஆவது சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் கடந்த புதன்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
டி.என்.ஏ அறிக்கை ஏன் தாமதமாகின்றது? என்பது பற்றி தெளிவுபடுத்த ஜின்டெக் நிறுவன அதிகாரியை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு, கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற வழக்குத் தவணையில் நீதவான் உத்தரவிட்டதன் அடிப்படையில், தாமதத்துக்கான காரணத்தை குற்றப்புலனாய்வு பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சமர்ப்பித்தது.
இதன்போது, டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஜின்டெக் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணம் கொடுக்கத் தாமதமாகியமையால், டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையானது இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அடுத்த தவணையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் எனவும், அந்த நிறுவனம் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மேற்படி வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்
Related posts:
|
|