வித்தியா கொலை: வாகனம் வழங்கியவருக்கு சிறை!
Saturday, January 13th, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியாவை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தின் உரிமையாளருக்கு 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட சிற்றூர்ந்திலேயே வித்தியா கடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும் அவர் குறித்த வாகனத்தை வழங்கியதன் பின்னர் வெளிநாடு சென்று, அண்மையில் நாடு திரும்பிய வேளையில் கைதாகியுள்ளார்.
அவர் மீது 6 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், இந்த கொலைக்கும் அவருக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்பது நிரூபனமானது.எனினும் அவரது வாகனம் மற்றும் வாகனத்துக்கான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், 3 மாத சிறை தண்டனையும், 18000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!
நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் இன்று முக்கிய கூட்டம்!
13 ஐ முழுமையாக அமுல்படுத்த பொதுஜனபெரமுன மக்களுக்கு உறுதியளிக்கவில்லை - புதிய அரசியலமைப்பை உருவாக்குவ...
|
|
|


