வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன் சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
யாழ்பாணம் புங்குடுதீவில், மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
Related posts:
முன்மாதிரியான சமுர்த்தி திட்டம் இலங்கையில் - அமைச்சர் எஸ்பி திசாநாயக்க!
இன்று நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்!
12,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை - நிதி அமைச்சு!
|
|