விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை – சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை எச்சரிக்கை!

Thursday, January 21st, 2021

சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக இன்றையதினம் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிகளுக்குள் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொவிட் தொற்று நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் பயண முகவர் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தர...
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும...
சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன் – உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பே...