விண்ணில் செய்மதி அனுப்புகிறது இலங்கை!

Saturday, November 25th, 2017

விண்ணாய்வு தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இலங்கை தனது முதலாவது நெனோ செய்மதியை 2020ஆம் ஆண்டு செலுத்தவுள்ளதாக ஆர்த்தர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான உதவிகளை ரஷ்யாவின் விண்ணாய்வு பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகம் இலங்கையில் நெனோ செய்மதிகள் குறித்த பயிற்சிப்பட்டறையை நடத்தியதுடன், இலங்கையின் 17 பொறியியலாளர்கள் ரஷ்யா சென்று பயிற்சிப் பெற்றுள்ளனர். இதன்படி இலங்கையில் முதலாவது நெனோ செய்மதி 2018ம் ஆண்டு உருவாக்க ஆரம்பித்து, 2020ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: