வைத்தியர்களின் பயண கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி!
Tuesday, July 31st, 2018
மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயண கொடுப்பனவுளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன.
இதற்கமைய சாதாரண மருத்துவர் ஒருவரின் கொடுப்பனவு 15 ஆயிரம் ரூபாவினாலும், மருத்துவ நிபுணர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
மருத்துவர்களுக்கு தற்போது 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் மூன்றாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு - டக்ளஸ் தேவானந்தா இரங்கல்
வடக்கின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையில் நிறைவான சந்தை வாய்ப்பு. யாழில் விவசாய அமைச்சர் சஷிந்திர ர...
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் - அரச மருத்துவ அதிகாரிகள...
|
|
|


