விஞ்ஞான தொழல்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில் புரிய வாய்ப்பு  – யாழில் ஜனாதிபதி மைத்திரி!

Wednesday, March 21st, 2018

விஞ்ஞான தொழில் நுட்ப துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்புரிய வாய்ப்புக்கள் கிட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார் .

யாழ் .புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப மைய திறப்பு விழா புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – நாம் பொறுப்புடன் புதிய கல்வித் திட்டத்தின் படி கல்வியை வழங்கவுள்ளோம் படித்துப் பட்டம் பெற்று விட்டு பலர் வேலையில்லாமல் உள்ளார்கள் அவர்கள் பட்டம் பெற்று விட்டு பல போராட்டங்களை நடத்துகின்றார்கள் அது அவர்களின் தவறு இல்லை கல்வி முறையிலும் கல்விக் கொள்கைகளிலும் உள்ள தவறு ஆகும் அரசு என்ற முறையில் அதைச் சரிப்படுத்தி திருத்தம் செய்து செல்கின்றோம்

புதிய கல்வி முறை அடிப்படையில் பட்டதாரிகள் போராடும் நிலமையை இல்லாமல் செய்யப் போகின்றோம். கடந்த வாரம் ஜப்பான் நாட்டு அதிபருடன் பேசினேன் அதில் இலங்கையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்

ஜப்பானில் உள்ள முக்கிய பிரச்சினை அங்குள்ள துறைகளுக்கு போதுமான வேலையாட்கள் இல்லாதது தான் காரணம் அவர்களுக்கு விஞ்ஞான தொழில்நுட்ப பாட பட்டதாரிகள் தேவைப்படுகின்றது எனவே எமது நாட்டின் விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் பட்டதாரிகள் இருந்தால் அவர்கள் ஜப்பானில் தொழில் புரிய வாய்ப்புள்ளது அது தொடர்பில் பேசியுள்ளேன்

எனவே நாம் எப்போதும் தொழில் மற்றும் எல்லா தொழில் துறைகளிலும் பல்கலையில் கல்வி கற்பவர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடவிதானத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம்

ஆரம்ப கல்வி இரண்டாம் தர கல்வியின் பின் பல்கலைக்கழகம் செல்கின்ற பொழுது மாணவர்களை சரியான முறையில் இனங்காண வேண்டும் கல்வியில் இருக்கக் கூடிய போட்டித் தன்மையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் அதை அரசு என்ற முறையில் பொறுப்புடன் நிறைவேற்றுவோம் என மேலும் தெரிவித்தார் .

Related posts: