வாழ்வுக்கு விளக்கேற்றிக்கொடுத்த டக்ளஸ் தேவானந்தாவை என்றும் நாம் மறக்கமாட்டோம் – பூம்புகார் பகுதி மக்கள் நெகிழ்ச்சி!

Thursday, July 21st, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் தமது சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்தி அதனூடாக தமது வாழ்வாதரங்களை மெருகூட்ட முடிந்துள்ளதாகவும் தமது வாழ்வியலுக்கு விளக்கேற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது பகுதி மக்கள் என்றும் நன்றிக் கடனுள்ளவர்களாக இருப்போம் எனவும் அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தமது பகுதி தோல் உற்பத்தி திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பாக நன்றிகூரும் நிகழ்வு கடந்த 20.07.2016 அன்று மாதர்சங்க ஏற்பாட்டில் பாலர் பாடசாலை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே குறித்த பகுதி மக்கள்  தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதி மக்களுக்கான நீதி ஒதுக்கீட்டை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கிட்டிலிருந்து பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின்போது மாதர்சங்க உறுப்பினர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாகசபை உறுப்பினர் ஜோசப் வின்சன் பிறிட்டோ என பலரும் கலந்துகொண்டனர்.

f8c48546-8a42-4f13-aba8-1420276f042a

Related posts: