வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Monday, May 4th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் மே மாதத்துக்கும்  5 ஆயிரம் ரூபாய் இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவை வழங்கும் பணி இன்று 4ஆம் திகதி திங்கட்கிழமைமுதல்  ஆரம்பிக்கப்பட்டு வரும் வரும் பௌர்ணமி தினத்துக்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி தினத்திற்கு மன்னர் அதாவது இம்மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும். வயோதிபர்கள், சிறப்புத் தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம்முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: