வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன!

Friday, October 9th, 2020

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும்.

சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும்.

இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: