வாயிற்காப்போர் போராட்டத்தால் வடக்கின் புகையிரத சேவை பாதிப்பு!
Wednesday, August 3rd, 2016
வடக்கு புகையிரத மார்க்கத்தை இடைமறித்து புகையிரத கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் – மதவாச்சி ஆகிய புகையிரத பாதைகளிலே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 31 ஆம் திகதி காலை ஆரம்பமான குறித்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்று 4ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலவசமாக மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!
இன்று உலக அஞ்சல் தினம் !
அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!
|
|
|


