வான் விபத்து! குடும்ப பெண் பலி,

நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதால் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயடடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –
தீவகம் நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த மேற்படி வாகனத்தின் சாரதி உறங்கிய நிலையில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள சுற்று வட்டத்திற்குள் நுழையும் பகுதியில் உள்ள மின் கம்பம் மற்றும் மரத்துடன் மோதி தலைகீழாக புரண்டுள்ளது.
இதில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த சிறீதரன் சிவமலர்(வயது48) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் மேலும் 9பேர் சிக்கியுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
இலங்கை முழுவதும் இலவச இணைய சேவை!
கடும் வறட்சி – நாட்டில் 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
|
|