வானில் பறந்த இலட்சக்கணக்கான பறவைகள்! ஆபத்தின் அறிகுறியா?

இலட்சக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் வானில் பறந்த அதிசய நிகழ்வு ஸ்பெயின் நாட்டின் லோக்ரோனோ நகரில் நடந்துள்ளது.
குறித்த பறவைகளை மார்கோ கெம்பசாக் என்ற நபர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இலட்சக்கணக்கான வண்டுகள் ஒரே நேரத்தில் பறப்பது போல் இந்த பறவைகள் தென்படுகின்றன. விளக்கு வடிவில் இந்த பறவைகள் பறப்பது சிறப்பம்சமாகும்.
ஐரோப்பா, ஆசியா,ஆபிரிக்கா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் சிறிய பறவை இனம் இப்படி கூட்டாக இணைந்து பறந்துள்ளமை சிறப்பான விடயம் என பறவையின ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் இலட்சக்கணக்கான பறவைகள் ஒன்றாக இணைந்து பறந்துள்ள சம்பவமானது பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும் இது விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு இலட்சக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து வானில் பறந்திருக்கின்றன.
பறவைகள் வானில் பறப்பதைப்பார்க்கும் போது ஏதோ ஒரு வடிவம் தெரிவதைப்போன்றும், அழகாக அனைத்தும் ஒரே விதமாக பறக்கும். இதை பார்க்கும் சிலருக்கு சந்தோஷமாக இருந்தாலும் இன்னும் சிலருக்கு மனதில் பயம் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|