நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்கை!

Saturday, August 21st, 2021

முடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீத பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த யோசனையை குறிப்பிட்டுள்ளார்.

இதில், தாம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 வீதம், அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் 50 வீதம் மற்றும் சிறு தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அத்துடன் தொற்று நிலைமையை முன்வைத்து, நாட்டு மக்களின் மன உறுதியை வீழ்த்தும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் செயற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: