7 சிறுவர்கள் உயிரிழப்பு – கல்வி நடவடிக்கைகளை நிறுத்த கல்வி அமைச்சர் உத்தரவு!
Monday, May 28th, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதியே இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரையில் இந்த தொற்றால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை இதுவரை 7 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மாயம்!
அமைச்சரவையின் நியமனத்தை தொழிற்சங்கங்கள் ஏற்கவேண்டும் – நிதியமைச்சர்!
தனது விருப்பத்தைத் திணிக்கும் பொருளாதாரத் திறன் அமெரிக்காவிடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் சுட்...
|
|
|


