வானிலை தொடர்பில் அறிவிப்பு!
Friday, August 9th, 2024
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
000
Related posts:
இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம்!
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான வழிமுறைகளை முன்வையுங்கள் - அமைச்சர் கலாநிதி பந்...
பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
|
|
|


