வாக்குறுதி எழுத்து மூலம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் -துறைமுக ஊழியர்!

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எழுத்து மூலம் வாக்குறுதி அளிக்கும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கலைக்க கடற்படை தலையிட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என, பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு - யாழில் போராட்டம் !
தபால் ஊழியர்கள் நண்பகல் முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்!
மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!
|
|