மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!

Thursday, June 21st, 2018

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, ஐக்கிய நாடுகளுக்கான அதன் தூதுவர் நிக்கி ஹலே அறிவித்துள்ளார்.

குறித்த பேரவையானது, பாசாங்குத்தனமாக செயற்படுவதாகவும், மனித உரிமைகள் விடயத்தை கேலிக்கூத்தாக்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு மனித உரிமைகள் பேரவையில் மேலோங்கியுள்ளமையே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் நிலைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று ஐ.நாவின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்க முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர, பின்னோக்கி செல்லக்கூடாது என்று மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கூறியுள்ளார்.

Related posts:

தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் - ஜன...
நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரிப்ப - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை - பாத...