வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, August 23rd, 2020
2020 வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு தொடர்பாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக வாக்காளர்களின் விபரம் பெறப்படவுள்ளது.
2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய நாட்டில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால்மா இறக்குமதியை நிறுத்த பால்மா கம்பனிகள் தீர்மானம்!
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் - வெளியானது வர்த்தமானி !
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!
|
|
|


