வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்!

Sunday, June 12th, 2016
வாக்காளர் பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

வாக்காளர் விபரத் திரட்டுக்கான விண்ணப்பங்கள் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

சில பிரதேசங்களில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் கிராம உத்தியோகத்தர்களால் பொறுப்பேற்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு நகரில் இம்மாத இறுதிக்குள் வாக்காளர் விபரத் திரட்டு விண்ணப்பங்கள் இதுவரை மக்களுக்குவிநியோகிக்கப்படவில்லை எனில், தேர்தல்கள் செயலகத்தினால் அதுகுறித்து வினவப்படும் என்றும் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்தார்.

ஜூன் மாதம் 21 ஆம் திகதிக்குள் வாக்காளர் விபரத் திரட்டு விண்ணப்பங்கள் கிடைக்காத பட்சத்தில், அதுகுறித்துகுடியிருப்பாளர்கள் வினவ முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை, கடுவெல, களனி உள்ளிட்ட பிரதேசங்களிலும், தீப்பற்றியசாலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதியிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வாக்காளர் விபரத் திரட்டுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், அந்த வாக்காளர்களையும் கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேர்தல்கள்ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Related posts: