வாக்காளர் இடாப்புக்கள் இன்றுமுதல் காட்சிக்கு!

Thursday, August 10th, 2017

இவ் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், இன்று(10)முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம். எம் முஹமட் தெரிவித்துள்ளார்.2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை உறுத்திப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: