வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் அது தொடர்பாக அறிவிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Thursday, October 21st, 2021
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று 21 ஆம் திகதிமுதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் எதிர்ப்புக்களை தெரிவிக்க முடியும் என்றும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக, வாக்காளர் பதிவுச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 18 வயதைப் பூர்த்தி செய்த வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட முழுமையான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


