வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை இல்லை!

Sunday, December 24th, 2017

தேசிய அடையாள அட்டை இல்லாமல் வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்ட சுமார் 03 இலட்சம் பேர் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம்கூறியுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காமல் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக கூறியுள்ளார்.

இதனடிப்படையில் பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விஷேட திட்டத்தினை நடைமுறைப்படுத்தஉள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்காக படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் உரியவரின் தனிப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக அடையாள அட்டையுடைய மூன்றுஉறவினர்கள் மற்றும் அவர் வசிக்கும் பிரதேசத்தில் அடையாள அட்டை இருக்கின்ற மூன்று நபர்களின் தகவல்கள் ஆகியன வழங்கப்பட வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு சத்தியக் கடதாசி ஒன்று சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் வியானா குணதிலக கூறினார்.மேலும் இந்த திட்டத்திற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தில் விஷேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts: