வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
Wednesday, January 10th, 2018
ஒரு கோடியே 57 இலட்சத்து 68 ஆயிரத்து 814 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளும், ஐந்து இலட்சத்து 60 ஆயிரத்து 532 தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர்அட்டையும் விநியோகிப்பதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 11 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டை விநியோகத்திற்காக கிடைக்கப்பெறும் எனவும் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26 ஆம்திகதிகளில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி உத்தியோபூர்வ தபால்மூல வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திற்கு வழங்கும் நடவடிக்கை இடம்பெறவிருக்கிறது. இம்மாதம் 28 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாகும்.
வாக்களர் அட்டைகள் கிடைக்காதோர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப்பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


