வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் – தேர்தல் ஆணைக்குழு!

Saturday, February 3rd, 2018

வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமாகவும் தொலைபேசி ஊடாகவும் கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அஞ்சல்மூலம் தற்போது கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காதவர்கள் தமது பிரதேச அஞ்சல் நிலையத்திற்குச் சென்று வினவுவதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் - அரச மருத்துவ அதிகாரி...
மக்களின் தேவைகளை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை – அது தொடர்பிலல் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!