இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை – மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இன்றுமுதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில், மின்சாரக் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

இதற்கமைய, மின் கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து, பெரும்பாலும் இரண்டு தினங்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே சாதாரணமாக, 30 முதல் 60 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், அதற்காக அரசாங்கத்திடம் நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இதன்போது எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!
இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவு...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்...