வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அறிவிப்பு!
Monday, August 3rd, 2020
இதுவரை வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை செவ்வாய்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய தினங்களில் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சுமார் நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படாது தபால் நிலையங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு பொய் கூறுகின்றனர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவேசம்!
எண்ணெய் விலை வீழ்ச்சி!
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு - விற்பனையாளர்களுக்கு எதிராக...
|
|
|


