வாக்களிப்பு நிலையத்தியே வாக்குகளை எண்ணப்படும்!

Wednesday, September 13th, 2017

உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணியைத் திறமையாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குகளை எண்ணும் பணிக்குத் தேவையான வசதிகளைக் கொண்டதாக வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய தேர்தல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடினமான பகுதிகளில் மாத்திரம் பல வாக்களிப்பு நிலையங்களை ஒருங்கிணைக்கவும் ஒரு இடத்தில் வாக்குகளை எண்ணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு (மாவட்ட செயலர்) அனுப்பப்பட்டு முடிவு மீள் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்படும். அதனையடுத்து தேர்தல் ஆணையம் முடிவுகளைச் சம்பந்தப்பட்ட பிரிவு வாரியாக அறிவிக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

Related posts: