331,000 மாணவர்களின் உரிமைகள் மின்வெட்டு மூலம் மீறப்படுகின்றது – மின்சார விநியோக துண்டிப்பு தொடர்பில் முறையிடலாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, January 28th, 2023

உயர்தரப் பரீட்சை நடைபெறும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு ஏற்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 077 5 687 387 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவோ, அல்லது 011 8 392 641 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடகவோ முறைப்பாடுகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதற்கு மேலதிகமாக Consumers@pucsl.gov.lk என்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் ஊடாகவும் முறைப்பாடளிக்க முடியும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

மின் தேவை முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை அங்கீகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற 331,000 மாணவர்களின் உரிமைகள் மின்வெட்டு மூலம் மீறப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: