வாக்களிக்க நாடு திரும்பும் இலங்கையர்கள் கவனத்திற்கு – தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, November 2nd, 2019
எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க நாடு திரும்பும் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு வாக்காளருக்கு கடவுச்சீட்டை சமர்ப்பிக்க முடியாவிட்டால், மற்றொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்ற வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பதிவேட்டின் சாதாரண குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேட சந்திப்பு!
பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!
|
|
|


