வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி – காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Monday, April 10th, 2023
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்துக்களில் 2,446 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற 21 விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை– பெற்றோலியத் துறை அமைச்சு!
தொடர்ச்சியான மழைவீழ்ச்சி - கிளிநொச்சி மாவட்டத்தில் 198 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமை...
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய புதிய நடைமுறை - கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு த...
|
|
|


