வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவிப்பு!
Saturday, October 7th, 2023
இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மேல் மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இணுவில் பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
யானை - மனித மோதல்களைத் தடுப்பதற்கான கொள்கை மாற்றப்பட வேண்டும் - கோபா குழு பரிந்துரை!
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்...
|
|
|


