வாகன தட்டுப்பாட்டை போக்க உரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – இறக்குமதியாளர்கள் சங்கம் யோசனை!

வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தற்போது சிறிய ரக ட்ரக் வண்டி மற்றும் பாரவூர்திகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வாகன இறக்குமதி தடையின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாடுகளில் போன்று குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்தல் அல்லது உரிய முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கான தடை காரணமாக சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளன.
வாகன இறக்குமதிக்கான தடை மற்றும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டின் உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையை கட்டுப்படுத்துவதற்காக பொருத்தமான முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|