வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை!

அநுராதபுரம் மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் பிரதேச பொலிஸ் வாகனப் பிரிவு இணைந்து வாகன அனுமதிப்பத்திரம், போலி ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் தொடர்பில் கண்டறியும் விஷேட நடவடிக்கையொன்றை நேற்று (21) மாலை அனுராதபுரம் நகரை மையமாக வைத்து அமுல்படுத்தியுள்ளது
அநுராதபுரம் நகருக்குச் செல்லும் பல வீதிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டது.
அறுபத்தொன்பது வாகனங்களுக்கு பழுதுபார்த்தல் உத்தரவு, தடை உத்தரவு மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய 10 நாள் கால அவகாசம் அளிக்க அறிவுறுத்தப்பட்டதாக நடவடிக்கையை மேற்கொண்ட மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காலத்தில் அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதால், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|