வவுனியா வைத்தியசாலையில் கடும் சோதனை நடவடிக்கை – பதற்றத்தில் மக்கள்!

வவுனியா வைத்தியசாலையில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதனால் வைத்தியசாலைக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றபட்டு அங்கு தீவிர சோதனைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.
வைத்தியசாலையில் தற்பொழுது பதற்ற நிலை தணிந்துள்ளபோதும் வெளியிலிருந்து வைத்தியசாலைக்குள் செல்லும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து கிடைத்த அவசர பணிப்பின் காரணமாகவே இந்த பதற்ற நிலை நிலவியதென்று பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கையின் நகரொன்றுடன் இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்!
பலாலி விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவு!
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
|
|