வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்தடை
Wednesday, November 29th, 2017
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், பட்டானி சூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திர குளம் வரை, ஒமேகா லைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது - அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெள...
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதம்!
கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - ஜனாதிபதியின் சி...
|
|
|


