வழுக்கை ஆற்றில் மீன்பிடியில் ஈடுபடுவோர் தொகை அதிகரிப்பு!

Tuesday, November 7th, 2017

யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் வழுக்கை ஆறு கடலில் இணையும் பகுதியில் அண்மைக் காலமாக  நுகர்வுக்காக மீன்பிடியில் ஈடுபடுவோர் தொகையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். தெல்லிப்பழையில் ஆரம்பித்து கந்தரோடை, சண்டிலிப்பாய், நவாலி ஆகிய பகுதிகளுடாக வழுக்கை ஆறு அராலியில் யாழ்ப்பாண கடல் நீரேரியில் கலக்கிறது.

கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் வழுக்கை ஆறின் பத்து வான் கதவுகளில் ஆறு வான் கதவுகள்  நீர்ப்பாசனத் திணைக்களத்தால் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், வழுக்கை ஆறு கடலில் கலக்கும் பகுதியில் பலர் நுகர்வுக்காக மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

தமது நுகர்வுக்காக மீன்பிடிப்போர் தூண்டிலிலும் மீனவர்கள் சிலர் வீச்சு வலைகளைக் கொண்டும் மீன்பிடியில் குறித்த ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு தினமும் பல நூற்றுக் கணக்காணோர் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: