வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து -தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

வழமையான நேர அட்டவணைக்கு ஏற்ப புகையிரத சேவைகள் இன்றுமுதல் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக பெருந்திரளான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்!
ஒரு கிலோ நெல் 70 ரூபா - நிர்ணய விலை நிர்ணயிக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை என அமைச்சர் மஹிந்தான...
சதொச விலைக்கு கூட்டுறவு நிலையங்களில் பொருட்கள் - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|