வலியை துடைத்தெறிந்து எமது அபிலாஷைகளை வென்றெடுத்து தரும் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை பார்க்கின்றோம் – முல்லை மக்கள்!

Sunday, October 9th, 2016

நாம் மூன்று தசாப்தகாலமாக கண்டுவந்த கனவுகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் கலைந்துபோனதாகவே எண்ணியிருந்தோம். ஆனால் டக்ளஸ் தேவானந்தா என்னும் தன்னலமற்ற தலைவரூடாக நாம் கண்டுவந்த இலட்சியக் கனவுகளையும் உரிமையுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தையும் வென்றெடுக்கமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளதாக முல்லைத்தீவு கரைதுரைப்பற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கரைதுரைப்பற்று பிரதேச ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இன்றையதினம் (9) கரைதுரைப்பற்றில் நடைபெற்றது. இதில் கருத்தத் தெரிவிக்கையிலேயே குறித்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

DSC05686

கடந்த காலத்தில் ஆயுதப்போராட்டம் மூலமாக எமது இலக்குகளை அடைந்துவிட முடியும் என்ற வழிநடத்தலின் கீழ் நாம் பயணித்துக்கொண்டிருந்தமையால் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களது கருத்துக்களையும் அவர்கள் சார்ந்த மக்கள் நலத் திட்டங்களையும் இனங்கண்டுகொள்ள தவறியதுடன் உணர்ச்சி மிக்க வசனங்கள் பேசி  நாம் சிந்திய குருதியை முதலீடாக வைத்து தமது அரசியல் சுய இலாபங்களை நடத்தியவர்களுக்கும் துணைநின்றதன் வெளிப்பாடுகள் தான் நாம் முள்ளிவாய்க்கால் வரையான மிகப்பெரிய உயிர் அழிவுகளையும் பேரஅவலங்களையும் சந்தித்ததுடன் அதன் விழுப்பண்களையும் வடுக்களை இன்றுவரை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாகியுள்ளோம்

அதுமட்டுமல்லாது 2009 ஆழிவுகளின் பின்னரான காலத்தில் கூட மக்களுக்காக தூர நோக்கோடு யதார்த்தமான இணக்க அரசியல் வழிமுறைகளுடன் உழைத்துவந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியை இனங்கண்டு அவர்களது மக்கள் பணிகளுக்கு கைகொடுக்க தவறிவிட்டோம்.இதன் விளைவுகள் தான் இன்றுவரை வாழ்வில் மீண்டெழமுடியாத மக்களாக நாம் வாழவேண்டியுள்ளது.

DSC05687

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் எமது பகுதி மக்களது பூரண ஒத்துழைப்புகளுடன் எமது வாழ்வியலுடன் உரிமைகளையும் வென்றெடுக்கக்கூடிய புதிய வழிகாட்டியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியையும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் இனங்கண்டு அவரது யதார்த்தமான அரசியல் பாதைக்கு எமது கரங்களைகொண்டு பலப்படுத்த முடிவுசெய்துள்ளோம்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் எடுத்தக்கொண்ட இலக்கை அடையமுடியும் என்று நாம் எண்ணியிருந்த கனவுகள் யாவும் முள்ளிவாய்க்காலுடன் தகர்ந்துபோனாலும் நாம் கண்ட கனவகளையும் உரிமைகளுடனான வாழ்வியலையும் எமது இனம் டக்ளஸ் தேவானந்தா என்றும் தீர்க்கதிரிசனம் மிக்க தலைவரது வழிகாட்டல் மூலம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும்  எம்மிடம் மீண்டும் உதித்துள்ளது.

DSC05688

இழப்புக்களின் வலியையும் ஏமாற்றங்களின் ஆதங்கங்களையும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நாம் கற்றுக்கொண்டதால் யதார்த்த அரசியலூடாக தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வியல் தேவைகளை வென்றெடுக்கக் கூடிய சுயநலமற்ற தலைவராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை மடுமே எமது அபிலாஷைகளை வென்றெடுத்து தரும் தலைவராக பார்க்கின்றோம்

இதற்காக டக்ளஸ் தேவானந்தாவினது மதிநுட்பமான அரசியல் பாதையில் அவரது தலைமையில் பயணிக்க நாம் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டுள்ளதுடன் அவரது அரசியல் பலத்துக்காக எதிர்காலத்தில் ஒன்றிணைந்து கைகோர்த்து உழைப்பதற்கும்  முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

DSC05691

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், வடக்க மாகாணசபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை.தவநாதன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து மக்களது நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் கருத்துரைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


DSC05692

1

DSC05701 copy

Related posts: