உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, December 29th, 2023

அடுத்த ஆண்டு முதல் உள்ளூராட்சி மன்றங்களின் கொடுப்பனவு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கட்டணச் செயற்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை,  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் உரிமையுள்ள அரச அதிகாரிகளுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்படி, முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக, அமைச்சர்கள் சபையின் முடிவு மற்றும் உடன்படிக்கையின் பிரகாரம் இந்த அதிகாரிகளுக்கான மேலதிக சலுகைகள் தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சிப் பகுதிக்கு வெளியே உள்ள வேறு பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் காரணமாக முன்விரோதம் உள்ள அலுவலர்களிடம் முறையீடுகள் வந்தால், அதைத் அதன் துறைத் தலைவர் பரிசீலித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் அதற்கு, தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிகாரி, தனது பணியிடத்தில் அரசியல் செயல்பாடுகள், அரசியல் பிரசாரங்கள் மற்றும் விளம்பரப் பணிகளில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts: