வலய ரீதியாக முடக்குங்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, April 24th, 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தொற்று அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தாமதமின்றி விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ, தற்போது பல்வேறு வகையான வைரஸ் வகைகள் உலகில் வேகமாக பரவி வருகின்றன, அண்டை நாடான இந்தியா ஏற்கனவே அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக உலகளாவிய தொற்று எந்த நேரத்திலும் இலங்கையை பாதிக்கலாம். இதன் காரணமாக, நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, தற்போது ஆபத்தில் உள்ள நாட்டில், கொரோனாவை கட்டுப்படுத்த, அரசியல் தலைவர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!
வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரிப்பு - ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப...