வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எவரது அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து நிறுத்த மாட்டேன் – ஜனாதிபதி கோட்டபாய சூழுரை!
Sunday, August 2nd, 2020
தன்னை எவரும் அச்சுறுத்த முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பலருக்கு தொழில் கிடைத்தாலும் எழை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சுபீட்சத்தினை நோக்கி கொள்கை பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் அதிகாரத்திற்கு வரும் சந்தர்ப்த்தில் அந்த வேலைத்திட்டங்களை குழப்புவது சில குழுக்களின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் எந்தவொரு அடிப்படையுமின்றி துறைமுகத்திற்கு அருகில் குழப்பம் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சின்றனர். என்னை பயமுறுத்த அவர்களால் முடியாது. வறுமையை ஒழிப்பதற்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை தடுப்பதற்கு ஒருவருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


