தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் திட்டம் சாத்தியமற்றது – டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்!

Wednesday, August 1st, 2018

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களில் கைத்தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் வகையிலான கருவிகளைப் பொருத்தும் அரசாங்கத்தின் திட்டம் சிக்கலானது என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையங்களாக செயற்படுகின்ற அனைத்துப் பாடசாலைகளிலும் ஜாமர்களை பொருத்துவதாயின் எத்தனையென்று பொருத்துவது. அதற்கான செலவுகளை யார் பொறுப்பேற்பது போன்ற பல சிக்கல்கள் காணப்படுகின்றன.

தொலைத்தொடர்பு கோபுரங்களினூடாக தொலைபேசி தொடர்புகளை துண்டிப்பதாயின் அது பாரிய பிரச்சினைகளுக்கு வித்திடும். இவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினால் வர்த்தகர்கள், சாதாரண மக்கள் என பலரும் பாதிக்கப்படுவர். அது எந்தளவிற்கு நடைமுறைச்சாத்தியமாகும் என எனக்குத் தெரியாது.

பரீட்சை நிலையங்களுக்குள் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடுப்பதற்கு ஒரே வழி பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் மாணவர்களை சோதித்து உள்நுழைய அனுமதிப்பதே என நான் கருதுகின்றேன்.

ஆனால் தொலைபேசி தொடர்பை துண்டிக்கும் கருவிகளை பொருத்துவது என்பது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என்பதே எனது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: