வறுமையுடன் தொடர்புடைய தகவல்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உலக வங்கி நடவடிக்கை!

Saturday, May 8th, 2021

கொரோனா தொற்றுக் காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை உலக வங்கி ஆரம்பித்துள்ளது.

அத்துடன் பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டிற்கு மிகவும் தேவையான அபிவிருத்தி வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் குறித்த தமது தரவுகளைப் புதுப்பிப்பது உலக வங்கியின் எதிர்பார்ப்பாகும்.

இந்த அறிக்கை நாட்டிற்கு முக்கியமான ஒன்றாகும். உலக வங்கி ஒரு நாட்டின் வறுமையை ஒழிப்பதற்காக இவ்வாறான அறிக்கையிடல் பங்களிப்பை வழங்குகின்றது.

இதற்காக அரச மற்றும் தனியார் துறையினர் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பிரஜைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுமென உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாரிஸ் ஹதத் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஒன்லைன் ஆய்வு எதிர்வரும் 20ம் திகதி வரை இடம்பெறும். இதுவரை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நாட்டில் 19 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக 2.33 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: