வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவு!
Friday, September 23rd, 2022
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக 0114 35 46 47 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் 5 ஆம் திகதிவரை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் - தபால்மா அத...
27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!
சிறார்கள் தொடர்பிலான சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம...
|
|
|
பெப்ரவரி மாத மின் பட்டியல் கண்டனமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் - மின்சக்தி மற்ற...
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்று பேச்சு அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர...
சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுகின்றனர் - வெளிவி...


