வறட்சியுடனான வானிலையால் நாளாந்த மின்சார கேள்வி அதிகரிப்பு – மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவிப்பு!

நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாளாந்த மின்சார கேள்வி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரத்திற்கான கேள்வி 2,500 மெகாவாட்டிற்கும் மேலாக அதிகரித்து காணப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும், எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நீடிக்காது என எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 66 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன் நேரில் சென்று பார்வை!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
கொவிட் - 19 புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை - புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது உலக சுகாதார...
|
|