வறட்சியான வானிலை – நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, August 16th, 2023

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 11,333 விவசாயிகளின் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியினால் நாடளாவிய ரீதியில் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை இதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.

சிறுபோகத்தில் 06 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிக காணியில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அழிவடைந்த நெற்பயிர்களுக்காக ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதனிடையே, இழப்பீட்டை அதிகரிப்பதற்கான யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும்...
MF இனால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது - திறைசேரி ம...