வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது இலங்கைத்தீவில் மிகவும் வறட்சியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீர் நிலைகளில் உள்ள நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நீர் வழங்கல் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து 1939 என்ற எண்ணை அழைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திங்கட்கிழமை வங்கி விடுமுறை - அரசு அறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|