வர்த்தமானிக்கு எதிரான மனுவை மீளப்பெறப்பட்டது: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பு!

சர்ச்சையில் சிக்கியிருந்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெற்றுக் கொள்வதாகஇ நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படவுள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ஃபைசர் முஸ்தபாஇ கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அடுத்துஇ பிரதமரின் தலையீட்டுடன் குறித்த மனுக்களை தாக்கல் செய்தவர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன்போது குறித்த மனுவை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையில் சமரசம் காணப்பட்டுள்ளது.இதன்படி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனுவை மீளப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர்களும்இ தமது தரப்பு சட்டத்தரணியும் அறிவிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை ஆய்வு செய்துஇ அதற்கான தீர்வை வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தள்ளார்
இதனிடையே இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களில் சர்ச்சகைளில் சிக்காத 93 ஊள்ளூராட்சி மன்றங்களுக்கு தற்போது கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|